VIDEOS
UnTime- ல இவருக்கு மட்டும் தான் நான் போன் பண்ணுவேன்… கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்.. வைரல் வீடியோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தசரா மற்றும் மாமன்னன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. குறிப்பாக மாமன்னன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் உதயநிதி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் கலந்து கொண்டனர். அப்போது கீர்த்தி சுரேஷிடம் நீங்கள் untime இல் பேச நினைக்கும் நண்பர் யார் என்று கேள்வி கேட்க அதற்கு கீர்த்தி சுரேஷ் கூறிய பதில் தற்போது வீடியோவாக வைரல் ஆகி வருகிறது.