CINEMA
தல அஜித் பாணியில் களமிறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்…. வாழ்த்துக்களை குவிக்கும் சக நடிகர்கள்…!!

நடிகர் அஜித்குமார் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டே இருந்தாலும், கார் ரேஸ்களிலும் பங்கேற்று வருகிறார். தற்போது கார் பந்தய அணியையும் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித்தின் வழியில் நடிகை கீர்த்தி சுரேஷும் பயணிக்கத் தொடங்கியுள்ளார். அதாவது அபுதாபியில் கார் பந்தய பயிற்சி பெற்றார்.
கார் பந்தயத்தில் கலந்து கொண்ட வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பந்தயத்தில் களமிறங்கும் அவருக்கு சக நடிகைகள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.