LATEST NEWS
புற்றுநோயிலிருந்து மீண்ட விஷால் பட நடிகை.. மோசமான அனுபவங்களை கண்ணீருடன் அவரே பகிர்ந்த பேட்டி..!!

தென்னிந்திய சினிமா அளவில் நடிகைகள் பலருக்கும் சமீப காலமாக பல நோய்த்தொற்றுகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி சமீபத்தில் சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கமல் மகள் ஸ்ருதிஹாசனும் மன உளைச்சல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வருவதாக கூறியிருந்தார். இவர்களைத் தொடர்ந்து தமிழில் சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு மற்றும் தடையறத் தாக்க உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த மம்தா மோகன்தாஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து தற்போது மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார். இந்த நிலையில் புற்றுநோய் பாதிப்பில் இருந்து நீண்ட அனுபவங்கள் பற்றி இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், புற்றுநோய் பற்றிய புரிதல் இருந்தால் அதை எதிர் கொள்ள முடியும். அந்த நோயில் சிக்கியவர்களுக்கு அனுதாபம் நிறைய கிடைக்கும். ஆனால் அதனை எதிர்பார்க்கும் போது கஷ்டத்தை தான் கொடுக்கும்.
எனக்கு அனுதாபம் எதுவும் வேண்டாம் என்று தான் சொந்த ஊரை விட்டு வெளியேறினேன். சினிமாவை விட்டும் விலகி விட்டேன். மருத்துவமனையில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டேன். பெற்றோர்களின் அன்பை மட்டுமே எதிர்பார்த்த நான் குணமடைவது வரை கேரளாவுக்கு செல்லவில்லை. இந்த நோயில் சிக்கி குணம் அடைந்தாலும் முந்தைய தோற்றத்தில் இருக்க முடியாது என்பதை நான் உணர வேண்டும் என்று அவர் உருக்கமாக பேசியுள்ளார்.