LATEST NEWS
80s நடிகை லுக்கில் கொண்டையில் பூவுடன் பிரக்யா நக்ரா… சொல்ல வார்த்தை இல்லாமல் திணறும் ரசிகர்கள்..!!

மாடலிங் துறையில் இருந்து தற்போது சினிமா துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். அதன்படி மாடலிங் துறையில் இருந்து டிக் டாக் வீடியோக்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியவர்தான் பிரக்யா.
ஆரம்பத்தில் டிவி விளம்பரங்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியின் அஞ்சலி சீரியல் மூலம் நடிகையாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய எண் 4 என்ற திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் நுழைந்தார்.
அதேசமயம் புகழ்பெற்ற யூடியூப் தொடர்பான லாக்டவுன் காதல் என்ற தொடரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவரின் அழகுக்கும் கவர்ச்சிக்கும் ரசிகர்கள் இவரின் instagram பக்கத்தை விடாமல் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவருக்கு தற்போது சில பட வாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில் அந்த படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது புடவையில் ட்ரடிஷனல் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.