LATEST NEWS
மாமன்னன் படத்தில் ஹோம்லி லுக்கில் நடித்த ரவீனாவா இது?.. மாடர்ன் உடையில் கலக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன்.
இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாசிலுக்கு ஜோடியாக டப்பிங் ஆர்டிஸ்ட் நடிகையுமான ரவீனா ரவி நடித்திருந்தார்.
இதற்கு முன்னதாக இவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென தனி ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது மாமன்னன் திரைப்படம் தான்.
இந்த திரைப்படத்தில் இவர் சில காட்சிகளில் நடித்திருந்தாலும் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.