CINEMA
மணிமேகலைக்கு ஆதரவாக பதிவு போட்ட நடிகை ரேகா சிவன்….. என்ன சொன்னார் தெரியுமா…??

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தவர் மணிமேகலை. இவர் அந்த நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் திடீரென்று அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
இதற்கு காரணம் பிரியங்கா தான் என்றும், தனக்கு சுய மரியாதையே முக்கியம் என்று மணிமேகலை பதிவிட்டிருந்தார். இதனையடுத்து சின்னத்திரை பிரபலங்கள் ஒருசிலர் இதுகுறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்தவகையில் நடிகை ரேகா சிவன், தனக்கான சுயமரியாதையை தானாக தட்டி கேட்கும் போது தான் நாம் தனித்து நிற்போம். கௌரவத்தோடு நிற்கிறார் மணிமேகலை என்று இன்ஸ்ட்டாவில் பதிவிட்டுள்ளார் .