VIDEOS
“மான்சூன் சஃபாரிகள்”… நடுக்காட்டில் மறக்க முடியாத அனுபவம்.. நடிகை சதா வெளியிட்ட வீடியோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை சதா.தெலுங்கு மற்றும் கன்னட மொழி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழில் ஜெயம் திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் இவரின் முதல் படமே நல்ல வாய்ப்பை தேடி தந்தது. அதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.
அவ்வகையில் எதிரி, வர்ணஜாலம்,அந்நியன் மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அதன்படி இவர் சமீபத்தில் ஒரு காட்டு பகுதிக்கு சென்றிருந்த நிலையில் அங்கு திடீரென ஒரு ஆபத்தை சிக்கிக் கொண்டதாக கூறி அவர் வெளியேற்று உள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க