LATEST NEWS
மீண்டும் கிளாமர் குயினாக மாறிய சமந்தா… ஹாட் புகைப்படங்களை பார்த்து குஷியான ரசிகர்கள்..!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன.
அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்துவரும் சமந்தாவிற்கு ஹிந்தியில் ஃபேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார். இதன் படபிடிப்பை முடித்த பிறகு சமந்தா தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆன்மீகப் பயணம் மற்றும் தனது தோழிகளுடன் சுற்றுலா என விடுமுறையை சமந்தா கொண்டாடிவரும் நிலையில் மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது வித்தியாசமான லுக்கில் கிளாமர் காட்டி சமந்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.