LATEST NEWS
அந்த மனசு தான் சார் கடவுள்…! SRH வீரர் நடராஜனை கட்டாயப்படுத்தி நடிகர் அஜித்…. மீண்டும் ட்ரெண்டாகும் வீடியோ…!!!

யாக்கர் கிங் நடராஜனை கட்டாயப்படுத்தி அஜித் செய்ய வைத்து இருக்கும் செயல் தொடர்பான வீடியோ இணைத்து வெளியாகி வைரலாகி வருகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜனின் பிறந்த நாள் ஹைதராபாத்தில் ஒரு ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. அப்போது நடிகர் அஜித்தும் அந்த பிறந்தநாள் பாட்டியில் கலந்து கொண்டார்.

#image_title
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதை அனைவரும் பார்த்திருப்பார்கள். இந்நிலையில் தற்போது மற்றொரு வீடியோ வெளியாகி இருக்கின்றது. ஹைதராபாத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் குமார் கலந்து கொண்டிருந்தார். நடராஜ் அவர்கள் கேக் வெட்டி முதல் துண்டை அஜித் அவர்களுக்கு ஊட்ட சென்றார் .

#image_title
ஆனால் அஜிதோ எனக்கு முதலில் இல்லை முத்தையா முரளிதனுக்கு முதலில் கொடுங்கள் என்று அவரை கட்டாயப்படுத்தி ஊட்ட வைத்தார். அதன் பிறகு நடராஜனுக்கு அஜித் கேக்கை ஊட்டி விட்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவானது ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது. தனக்கு முதலில் வேண்டாம் முத்தையாவுக்கு ஊட்டுங்கள் என்று அஜித் கூறியதை பார்த்து அந்த மனசு தான் சார் வேண்டும் என்று ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

#image_title
இது ஒரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் கார் விபத்து நிகழ்ந்தது போன்று விடாமுயற்சி படத்திலிருந்து வெளியான காட்சிகள் அஜித் ரசிகர்களை மேலும் வருத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. பலரும் இது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று அஜித் அவர்களை கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.
#Thala #Ajith & legendary cricketer #MuttiahMuralitharan at @Natarajan_91 birthday celebration #Ak #Natarajan #VidaaMuyarchi pic.twitter.com/5TWldIJqg9
— AK (@iam_K_A) April 5, 2024