1.8 கோடிக்கு வீடு கட்டிய ஆலியா மானசா…. ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா…?? - cinefeeds
Connect with us

CINEMA

1.8 கோடிக்கு வீடு கட்டிய ஆலியா மானசா…. ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா…??

Published

on

ராஜா ராணி என்ற தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் ஆலியா மானசா. அந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. தற்போது ஆலியா “இனியா” என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து பிரமாண்டமான வீட்டை கட்டியுள்ளார்கள். இது குறித்து ஆலியா மானசா பேட்டி  ஒன்றில் பேசியுள்ளார்.

அதில் ஒரு சின்ன வீட்டில் நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம். இதனால் இப்பொழுது எங்கள் ஆசைப்படி வீடு வாங்கி இருக்கிறோம். இந்த வீடு சுமார் 1.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க லோனில் கட்டி உள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து  2020 ஆம் வருடம் இனியா தொடரின் மூலம் ஒரு நாள் ஷூட்டிங்க்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் தரப்பட்டது. தற்பொழுது ஒரு நாள் ஷூட்டிங் இருக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் வாங்குவதாக கூறியுள்ளார்.

Advertisement