CINEMA
கூண்டோடு ராஜினாமா….. கலைந்தது மலையாள நடிகர் சங்கம்…. பேரதிர்ச்சி…!!

மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினராக இருந்தார்கள். இந்த கமிட்டிக்கு 600க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
படங்களில் நடிக்க வந்த போது அனுபவித்த கொடுமைகள் குறித்து அவர்களிடம் வாக்குமூலம் ஆகவும் தரப்பட்டது. நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்து வந்த நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிக்கை வெளியானது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கூறப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் உட்பட எந்த விவரங்களும் இடம்பெறவில்லை.
இந்த ஹேமா கமிட்டி அறிக்கை ஏற்படுத்திய பூகம்பத்தால் முக்கிய நடிகர்கள் அடுத்தடுத்த ராஜினாமா செய்து வரும் நிலையில், மலையாளத் திரைப்பட நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளார்கள். பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையடுத்து ராஜினாமா செய்துள்ளனர்.