CINEMA
பிக்பாஸ்-8 போட்டியாளர்கள் இவர்கள் தானா…? வெளியானது லிஸ்ட்…!!
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்தது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இப்படி ஒரு நிலையில் திடீரென்று கமலஹாசன் நிறைய படங்களில் கமிட்டாகி இருப்பதால்இதிலிருந்து விலகி உள்ளார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் சேதுபதி அல்லது நயன்தாரா தொகுப்பாளராக வருவதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த சீசனில் எந்தெந்த நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த அப்டேட் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அந்தவகையில் அந்த லிஸ்டில் நடிகை பூனம் பாஜ்வா, பிரீத்தி முகுந்தன், அமலா ஷாஜி, ஷாலின் ஜோயா, TTF வாசன், சிவாங்கி உள்ளிட்டோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.