CINEMA
அட குழந்தை பிறந்து கொஞ்ச நாள் தானே ஆகுது…. அதுக்குள்ள இன்னொரு விசேஷமா…? கொண்டாட்டத்தில் அமலாபால்…!!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முன்னணி நடிகையாக இருந்தவர். கோலிவுட்டில் பிரபல நடிகர்களான அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களோடு இணைந்து நடித்தார். இதற்கிடையில் அமலாபால் பற்றிய சர்ச்சைகள் பரவலாக இருந்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது என்று சொல்லலாம். அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் என்று சென்றுவிட்டார். சினிமா வாழ்க்கை இப்படி சோர்வாக இருந்தாலும் சுற்றுல,, போட்டோ சூட் என்று இன்னொரு பக்கம் பிசியாகவும் இருந்து வருகிறார்.
இதற்கிடையில் அமலா பால் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. திருமணம் முதல் குழந்தை பிறந்தது வரை அனைத்து புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் அமலாபால் நேற்றைய தினம் தன்னுடைய முதலாவது திருமண நாளை கணவர் மற்றும் குழந்தையோடு கொண்டாடியுள்ளார்.
ஏற்கனவே மகன் பிறந்த குஷியில் இருக்கும் அமலா பால் இரட்டை விசேஷமாக அன்றைய நாளை கொண்டாடியுள்ளார் .தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.