#image_title

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் கொடிகட்டி பறந்தவர்தான் நடிகை ரேகா. இவர் மற்ற நடிகைகளை போலவே சினிமாவிலிருந்து ஒரு கட்டத்தில் காணாமல் போனார்.

இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவருக்கு இன்றும் தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இடையில் பல வருடங்கள் காணாமல் போன இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பாவின் அம்மா கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். தற்போது இவர் சீரியலில் எதுவும் கமிட்டாகாமல் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வருகிறார். தற்போது ரேகா UK வில் அவரின் சகோதரியின் தோழி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவரது வீட்டை வீடியோவாக எடுத்து ரேகா பதிவிட்டுள்ளார். வீட்டின் பாத்ரூமிலேயே படுத்து விடலாம் அப்படி இருக்கிறது என்று கூறி அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.