அம்மாடியோ இத்தனை கோடியா?…. வாரிசு திரைப்படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம்…. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ இத்தனை கோடியா?…. வாரிசு திரைப்படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம்…. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தமிழ் திரையுலகின் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட்டை அடிப்படையாக வைத்தும் ஓரளவு ஆக்சன் திரைப்படமாகவும் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்திற்காக விஜய் 125 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது . இறுதியாக நடித்த பீஸ்ட்திரைப்படத்திற்கு கூட 80 கோடி மட்டுமே விஜய் சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது அதைவிட 45 கோடி அதிகமாக பெற்றுள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in