சூப்பர் ஸ்டாரை பார்க்க தமிழகத்திலிருந்து இமயமலைக்கு… 55 நாட்கள் நடந்தே சென்ற தீவிர ரசிகர்… அவருக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி… – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பர் ஸ்டாரை பார்க்க தமிழகத்திலிருந்து இமயமலைக்கு… 55 நாட்கள் நடந்தே சென்ற தீவிர ரசிகர்… அவருக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி…

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதேசமயம் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் திரைப்படத்திலும் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பை முடித்த கையோடு ரஜினி மாலத்தீவு பக்கம் சென்று இருந்தார். அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்த அவர் இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்தார்.

Advertisement

புதிய எனர்ஜியோடு விழா மேடையில் அவர் பேசிய பேச்சு அந்த அளவிற்கு இருந்தது. அதுவே ஜெயிலர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற உணர்வை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இப்படி சூப்பர் ஸ்டார் என்ற பெயரே தாரக மந்திரமாக ஒலித்துக் கொண்டிருந்த நிலையில் உலகம் முழுவதும் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகும் முன்னரே இமயமலைக்கு கிளம்பி சென்ற ரஜினிகாந்த், அங்கு தன்னுடைய ஆன்மீக பயணத்தில் பிசியாக உள்ளார். சுமார் நான்கு வருட இடைவேளைக்குப் பிறகு இமயமலை செல்லும் ரஜினி இப்போது மிகவும் புத்துணர்ச்சியோடு இருக்கிறார்.ஒரு வாரம் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

Advertisement

இமயமலை பயணம் முடிந்தவுடன் இன்னும் ஒரு சில தினங்களில் சென்னை திரும்ப உள்ள ரஜினி, ஜெயிலர் பட வெற்றியை படக்குழுவுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளார். இமயமலையில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு நடைபயணமாக சென்று சாமி தரிசனம் செய்து வரும் ரஜினி, நேற்று பாபாஜி குகைக்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு அவரை காண ரசிகர் ஒருவர் காத்திருந்தாராம்.

 

Advertisement

பின்னர் ரஜினி அவரை சந்தித்து பேசியபோது தான், அந்த ரசிகர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றும், தன்னை பார்ப்பதற்காக 55 நாட்கள் நடைபயணமாக இமயமலை வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் நெகிழ்ந்து போன ரஜினி அந்த ரசிகருக்கு பண உதவி செய்ததோடு, அவர் மரத்தடியில் தூங்கியதை அறிந்து, அவருக்கு தங்குமிடமும் ஏற்பாடு செய்ய உதவி இருக்கிறார். ரஜினியின் இந்த செயலுக்கு பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in