LATEST NEWS
திக் திக் திக்.. திடீரென மிரண்ட யானையின் வெறித்தனமான ஆட்டம்.. தும்பிக்கையால் பாகனைத் தூக்கி வீசிய கொடூரம்.. நெஞ்சை உறையவைக்கும் வீடியோ..!!
வாரணாசியின் உலகப் புகழ்பெற்ற ராம்நகர் ராம்லீலா விழாவிற்காக ஆசம்கரில் இருந்து கொண்டு வரப்பட்ட யானை ஒன்று, பஞ்சவடி மைதானத்தில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து ஆக்ரோஷமாக அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை 10:30 மணியளவில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. பாகன் உணவளிக்கச் சென்றபோது எதனால் என்றே தெரியாத காரணத்தால் மிரண்ட அந்த யானை, தனது தும்பிக்கையால் பாகனைத் தூக்கி வீசி எறிந்து கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் ‘சாப்லு’ என்ற அந்தப் பாகன் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின்அதிர்ச்சி சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு, தீவிரச் சிகிச்சை பெற்று வருகிறார்.
யானையின் இந்த வெறித்தனமான ஆட்டத்தால் அப்பகுதியில் இருந்த மின்கம்பங்கள், வீடுகள் மற்றும் கடைகள் கடுமையாகச் சேதமடைந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடியதால் அங்கு பெரும் குழப்பமான சூழ்நிலை நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படை உட்படச் சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரண்டு கிலோமீட்டர் சுற்றளவிற்குப் பாதைகள் முற்றிலும் சீல் வைக்கப்பட்டன. தற்போது அந்த யானை பாதுகாப்பாக ஒரு காட்டுப் பகுதிக்குள் தனிமைப்படுத்தப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
