CINEMA
அத்தனை பேரையும் உட்கார வைத்து…. படப்பிடிப்பில் அருண் விஜய் செய்த காரியம்…. வீடியோ வெளியிட்ட ரெட்ட தல பட ஹீரோயின்…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான்கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜய் நடிப்பில் ரெட்ட தல படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சித்தி இத்தானி ஹீரோயினாக நடித்திருக்கிறார். இதற்கு முன்பாக சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் ஆக இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ரெட்ட தல படப்பிடிப்பின் போது படக் குழுவினருக்கு நடிகர் அருண் விஜய் சைவ விருந்து வைத்துள்ளார். இதனை அடுத்து உணவு பரிமாறும் இந்த வீடியோவை நடிகை சித்தி இத்தானி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/i/status/1841041023801114783