LATEST NEWS
மோசமான உடல்நிலை…. நோய்க்கு மருந்து தேடி வெளிநாடு பறக்கும் நடிகை சமந்தா…. அதுவும் எந்த நாடு தெரியுமா….????
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் முதன்முதலில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனம் ஆடுவதன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார். சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கடந்த மூன்று மாதங்களாக மிகவும் சிரமப்பட்டு வருவதாக உருக்கமாக ஒரு பதிவை வெளியிட்டார்.
அதன் பிறகு சற்று உடல் நலம் தேறியதாக கூறிய சமந்தா தற்போது ஆயுர்வேத மருத்துவர்களால் சிகிச்சை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மயோசிடிஸ் நோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்காவிட்டாலும் அதிலிருந்து விடுபட பல காலம் எடுத்துக் கொள்ளும். தற்போது ஆயுர்வேத மருத்துவம் பலன் தருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சமந்தாவின் உடல்நிலை தற்போது மோசமாக உள்ளதால் மயோசிட்டிஸ் நோய்க்கு மருத்துவம் பார்ப்பதற்காக தென் கொரியா நாட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தகுந்த சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு இந்தியா திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சமந்தா விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
