LATEST NEWS
அவங்க 2 பேரும் திருமணமே பண்ணிக்கல.. உண்மையில் நடந்தது இதுதான்.. பப்லு பிரித்திவிராஜ் விவகாரத்தில் பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

தமிழ் சினிமாவில் நடிகர் பப்லு என்கிற பிரித்திவிராஜ் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் பப்லு நடித்துள்ளார். சீரியலிலும் பப்லு நடித்துள்ளார். கடந்தாண்டு பப்லு 24 வயதுடைய ஷீத்தல் என்ற பெண்ணுடன் இணைந்து வாழ்வதாக கூறினார்.

#image_title
இதனைக் கேட்ட நெட்டிசன்கள் இந்த வயசில் இதெல்லாம் தேவையா என பப்லுவை கடுமையாக விமர்சித்தனர். இதற்கெல்லாம் கொஞ்சமும் அசராத பப்லு என்னை பாருங்க நான் எவ்வளவு இளமையாக இருக்கிறேன். உடம்பை எப்படி ஃபிட்டாக வைத்திருக்கிறேன் என பதிலடி கொடுத்தார்.

#image_title
இதனையடுத்து பப்லுவும் ஷீத்த லும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பப்லு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் பப்லுவின் காதலி ஷீத்தல் இல்லை. ஷீத்தலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பப்லுடன் இருக்கும் போட்டோவும் வீடியோவும் டெலிட் செய்யப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் சினிமா விமர்சகரான பயில்வான் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதாவது பப்லுவும் சீத்தலும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ளவே இல்லை. வெளிநாட்டு கலாச்சாரத்தைப் போல பிடித்திருந்தால் ஒன்றாக வாழ்வோம்.

#image_title
இல்லையென்றால் பிரிந்து விடுவோம் என்ற முறையில் இருவரும் இவ்வளவு நாள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பப்லுவையும் சீத்தலையும் நான் குற்றம் சொல்லவில்லை. அது அவர்களது வாழ்க்கை என பயில்வான் பேசி இருந்தார். அடிக்கடி சண்டை போட்டு கொண்டு பின்னர் சமாதானமாகும் பப்லு, ஷீத்தல் அடுத்ததாக என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

#image_title