மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் குடும்ப புகைப்படங்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் குடும்ப புகைப்படங்கள்…

Published

on

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரை சீரியல்களுக்கு என்ற மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இந்த சீரியலானது ஒரு அழகான கூட்டு குடும்பத்தின் கதையாகும்.

அண்ணன் தம்பி நான்கு பேர் வாழ்க்கையில் நிகழும் எதார்த்தமான கருத்துக்களை கூறும் சீரியலாக இந்த சீரியல் அமைந்துள்ளது. இந்த சீரியலில் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலை இயக்குனர் சிவசேகர் இயக்கி வருகிறார்.

Advertisement

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜ் , வெங்கட், சித்ரா, ஹேமா, ஷீலா, சுமங்கலி, கம்பம் மீனா, சத்யா சாய் போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் மறைந்த நடிகை சித்ரா.

இவர் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். MSc பட்டப்படிப்பை படித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சட்டம் சொல்வது என்ன’ என்ற நிகழ்ச்சியின் மூலமாக தொகுப்பாளனியாக சின்னத்திரையில் அறிமுகமானார்.

Advertisement

அதைத் தொடர்ந்து நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுத்தலாம் வாங்க போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதைத் தொடர்ந்து வேந்தர் டிவி, ஜீ தமிழ், ஸ்டார் விஜய் ஆகிய சேனல்களில் பிஸியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இவரின் சின்னத்திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

Advertisement

அதை தொடர்ந்து வேலு நாச்சியார், டார்லிங் டார்லிங், மன்னன் மகள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.அதன் பிறகு சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் நடித்திருந்தார். ‘கால்ஸ்’ என்ற திரைப்படத்தில் நந்தினி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் ரிங் ஓ ரிங், நடன ஜோடி நடனம் சீசன் 1, நான்பெண்டா, ஜீ டான்ஸ் லீக், ஜோடி வேடிக்கை அன்லிமிடெட் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றார். நடிகை சித்ரா தொழிலதிபரான ஹேமத் ரவி என்பவரை காதலித்து வந்தார்.

Advertisement

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். ஒரு சில பிரச்சினையின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in