அட..! இத்தனை நாள் இது தெரியாம போச்சே…! இந்த ஒரு இலை போதும்… முடி உதிர்வு முதல் இருமல் வரை எல்லாத்துக்கும் குட்பை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட..! இத்தனை நாள் இது தெரியாம போச்சே…! இந்த ஒரு இலை போதும்… முடி உதிர்வு முதல் இருமல் வரை எல்லாத்துக்கும் குட்பை..!!

Published

on

கடவுளுக்கு படைப்பதற்கும், பெரியவர்களுக்கு மரியாதையாக வழங்குவதற்கும் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலை வெப்பமான பகுதிகளிலும் சதுப்பு நிலங்களிலும் வளரும் ஒரு கொடி வகை தாவரமாகும். இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அந்தவகையில், வெற்றிலையை சாப்பிடுவதால் உடலிற்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

வெற்றிலையை 2 ஸ்பூன் சாறாக்கி அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு பலம் கிடைக்கும், உடலுக்கு வெப்பம் தருவதுடன் வாய்நாற்றத்தையும் குறைக்க உதவுகிறது. மேலும், இது நரம்பு மண்டலத்திற்கு பலம் அளித்து ஞாபக சக்தியை மேம்படுத்தவும், அஜீரணத்தைக் குறைத்து செரிமானத்தைத் தூண்டி வயிற்றில் இருக்கும் வாயுவை வெளியேற்றவும் பயன்படுகிறது. பாரம்பரிய நம்பிக்கையின்படி, வெற்றிலை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுவதுடன், சாறுடன் தண்ணீர் மற்றும் பால் கலந்து குடித்தால் சிறுநீர் நன்றாக பிரியவும் உதவும்.

Advertisement

இதன் பயன்பாடு பல் ஆரோக்கியம், முடி வளர்ச்சி மற்றும் வலி நிவாரணத்திலும் பெரிதும் துணைபுரிகிறது. ஈறுகளில் ஏற்படும் வலி மற்றும் ரத்தக்கசிவை குறைத்து பற்களைப் பாதுகாப்பதுடன், முடி உதிர்வைக் குறைத்து பொடுகு மற்றும் தலை அரிப்பைப் போக்குகிறது. மேலும், 2 வெற்றிலையுடன் 5 மிளகு சேர்த்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் உடல் எடை குறைய உதவும். காயங்கள் மற்றும் வீக்கத்தில் இதன் விழுதை தடவினால் வலி குறையும்; கடுகு எண்ணெயில் சூடுபடுத்தி மார்பில் பற்றாகப் போட்டால் இருமல் மற்றும் மூச்சுத்திணறலுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in