LATEST NEWS
ஆதாமா….! அவர் எங்க இருக்காரு….. மறுபடியும் கமலுக்கு பல்பு கொடுத்த ஜி பி முத்து….. வைரல் வீடியோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஏற்கனவே கடந்த ஐந்து சீசன்களையும் வெற்றிகரமாக முடித்த நிலையில், தற்போது ஆறாவது சீசன் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் துவங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. கடந்த சீசனங்களில் இல்லாத அளவிற்கு தற்போது 20 போட்டியாளர்களை களத்தில் இறக்கியுள்ளது பிக் பாஸ். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் தொடங்கிய முதல் நாளே டாஸ்க் லஞ்சூரி பட்ஜெட், கிளப் ஹவுஸ் என்று அதிரடி காட்டிய பிக் பாஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் முதல் இரண்டு நாட்கள் சாதாரணமாக சென்ற நிகழ்ச்சி தற்போது சண்டை, பிரச்சனை என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் உலகநாயகன் கமலஹாசன் ஹவுஸ் சந்தித்து பேசுவார் இதற்கான பிரமோ வெளியானது. இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவில் மீண்டும் ஜி பி முத்து உடனான ஆதாம் ஏவல் பிரச்சனை தொடர்ந்தது.
இதில் ஒரு டப்பாவில் பாதாமை அனுப்பிய கமலஹாசன் இதை திறந்து பாருங்கள் என்று கூற, அவரும் அதை திறந்து பார்த்துவிட்டு இது பாதாம் என்று கூறினார் .பாதாம் தெரிகிறது ஆனால் ஆதாம் மற்றும் தெரியல. இதனால அவர் எவ்வளவு வருத்தப்படுறாரு தெரியுமா என்று கேட்க ஆதாமா அவரு எங்க இருக்காரு என்று ஜிபி முத்து பதில் கூறினார். இந்த பதிலை கேட்டு மீண்டும் கமலஹாசன் அதிர்ச்சி அடைய ஹவுஸ்மேட் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.