LATEST NEWS
பிரபுதேவாவை நேரில் சந்தித்து செல்பி எடுத்த பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் க்யூட் புகைப்படம் இதோ….!!!!

தென்னிந்திய சினிமா திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் தான் பிரபுதேவா. இவர் நடிகர் மட்டுமல்லாமல் நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவரின் நடனத்திற்கு ஒரு ரசிகர் பட்டாளமும் மற்றொரு பக்கம் இவரின் நடிப்பிற்கு ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது. அந்த அளவிற்கு நடிப்பின் திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் எதுவும் அந்த அளவிற்கு ஹிட் ஆகாததால் நடன இயக்கத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் பிரபுதேவாவை போலவே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அமீர்.
இவர் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான பாவணி என்ற நடிகையை காதலித்து வரும் நிலையில் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. தற்போது இவர் பிரபுதேவாவை நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க