பிக்பாஸ் செய்யப் போகும் பெரிய சம்பவம்…. சீக்ரெட் ரூமில் பிரபல போட்டியாளர்…. இனி தான் ஆட்டமே ஆரம்பம்….!!!! - cinefeeds
Connect with us

TRENDING

பிக்பாஸ் செய்யப் போகும் பெரிய சம்பவம்…. சீக்ரெட் ரூமில் பிரபல போட்டியாளர்…. இனி தான் ஆட்டமே ஆரம்பம்….!!!!

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 80 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். அவ்வகையில் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத விதமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து தனலட்சுமி வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில் தனலட்சுமி வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் எலிமினேட் ஆகும் போட்டியாளர்களை disney+ hotstar பேட்டி எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு வருகிறது. ஆனால் தனலட்சுமியை பிக் பாஸ் சீக்ரெட் ரூமில் வைத்துள்ளதால் அவரை பேட்டி எடுக்கவில்லை. எனவே இந்த வாரம் இறுதியில் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வரலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் தனலட்சுமி வெளியே போனதற்கு ரம்யா கிருஷ்ணன் மேம் மிகவும் வருத்தப்பட்டாங்கலாம் என்று போட்டியாளர்கள் பேசும் ஒரு வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

https://twitter.com/BeatsLyricsOffl/status/1608376748617650182

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in