LATEST NEWS
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் பிரதீப்.. படத்தை தயாரிப்பது இந்த பிரபல நிறுவனமா..? இதைத்தானே எதிர்பார்த்தோம்..!!

பிரதீப் ஆண்டனி அருவி திரைப்படத்தில் பீட்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். இதனையடுத்து சிவகார்த்திகேயன் தயாரித்த வாழ் திரைப்படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருந்தார். கடைசியாக கவினின் டாடா திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மறக்க முடியாத போட்டியாளர்களில் ஒருவர் பிரதீப் ஆண்டனி. பிரதீப் ஆண்டனிக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அவர்தான் டைட்டிலை பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்டார்.
பிரதீப் வெளியேற்றியதால் கமல்ஹாசனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் தொடர்ந்து மக்கள் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவு கொடுத்தனர். இயக்குனராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. இருப்பினும் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு பிரதீப்பை தேடி வந்துள்ளது. அந்தப் படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோவாக நடிக்க பிரதீப்புக்கு வாய்ப்பு வருகிறது. அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.