CINEMA
காதலனால் கொடுமைகளை அனுபவித்த பிக்பாஸ் சௌந்தர்யா…. நடுரோட்டில் நடந்த சம்பவம்…!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது. எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர்.
பிக்பாஸ் சொல்லும் வரை இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டிற்குள் சண்டை, ஆர்ப்பாட்டம், மகிழ்ச்சி என சூடுபிடிக்க ஆரம்பமாகி விட்டது. இந்நிலையில் சௌந்தர்யா தன்னுடைய காதல் கதையை கூறியுள்ளார் . அதாவது லவ்ர்க்கு தெரியாமல் மாடலின் போட்டோஷூட் புகைப்படங்களை போனில் ஹைட் பண்ணி வைத்திருந்தேன்.அவனுக்கு மாட்லிங்க் பிடிக்காது.
ஒரு முறை பார்த்துவிட்டதால், நடு ரோட்டில் வைத்து அடித்துவிட்டான். ஒரு முறை சாஸ் பாட்டில் வைத்து தலையில் அடித்தான். ஒருகட்டத்தில் என்னுடைய கேரியர் முக்கியம் என முடிவு செய்து இருவரும் பிரிந்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.