சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கிலிருந்து கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் இதனை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனையடுத்து ஹேம்நாத் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.