LATEST NEWS
அன்று பார்த்த அதே இளமையுடன் இன்றும்…! வாரிசு திரைப்படத்தில் விஜயின் புகைப்படம்… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகர் விஜய் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார், மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த மாத இறுதிக்குள் முழு படபிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகின்றது.தீபாவளி தினத்தன்று வாரிசு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாக உள்ளதாக பட குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் வாரிசு படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. கையில் கேமராவுடன் விஜய் சமமாக நடந்து வரும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது .2011 ஆம் ஆண்டு வெளியான ஒரு தனியார் விளம்பர படத்தில் நடித்த போது இருந்த விஜய் ஒரு சிறிய மாற்றமும் இல்லாமல் அதே இளமையோடு இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.