ஷாருக்கான் படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட தீபிகா…. அந்த உடையால் எழுந்தது சர்ச்சை…. கடும் எதிர்ப்பு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஷாருக்கான் படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட தீபிகா…. அந்த உடையால் எழுந்தது சர்ச்சை…. கடும் எதிர்ப்பு….!!!!

Published

on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் தற்போது ஷாருக்கான் உடன் பதான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. பதான் திரைப்படத்தை தவிர தீபிகா படுகோனே பைட்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு மனைவியாக நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் அப்படத்தின் Besharam rang என்ற பாடல் வெளியாகி உள்ளது. அந்தப் பாடலில் தீபிகா படுகோனே பிகினி உடையில் கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்டுள்ளார். திருமணமான நான்கு வருடத்திற்கு பிறகு இப்படி ஒரு கிளாமரான லுக்கில் அவர் ஆட்டம் போட்டு உள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் மறுபக்கம் பதான் படத்தில் புதிய பிரச்சனை எழுந்துள்ளது.

Advertisement

அதாவது தீபிகா படுகோன் காவி பிகினி ஆடை அணிந்தும் ஷாருக்கான் பச்சை நிற ஆடை அணிந்தும் கவர்ச்சியாக இந்து சமயத்தை அவமானப்படுத்துவதாக சிலர் புகார் அளித்து கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் #pathaanboycott என்ற ஹேஸ்டேக்கினை பகிர்ந்து எதிர்பார்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in