LATEST NEWS
தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்தால் கர்நாடக அணைகள் வறண்டுவிடும்… பிரதமருக்கு தேவகௌடா கடிதம்…!!
முன்னாள் பிரதமர் தேவகௌடா, கர்நாடகாவின் காவிரி படுகை மற்றும் நீர்ப்பாசனத் தேவைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு 6 பக்க கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் போதிய மழை பெய்யாததால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அணைகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்தால், கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் வறண்டுவிடும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். இதனால் பெங்களூரு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் குடிநீருக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள மேக்கேதாட்டு குடிநீர் திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
