LATEST NEWS
நல்ல ஆம்பளையா இருந்தா பொன்னியின் செல்வன்ல்ல….. அதை காட்டியிருக்க வேண்டியதுதானே?….. விளாசிய பிரபல இயக்குனர்….!!!!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ளார். கடந்த 30 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை படைத்து வருகின்றது.
இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தொடர்ந்து தற்போது வரை இந்த படத்திற்கான டிக்கெட் பல திரையரங்குகளில் புல்லாகி உள்ளது.
இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குனர் கௌதமன். இந்த படம் எடுத்த விதம் இப்போது வசூலை குவிக்கும் விதம் எல்லாம் கரெக்டுதான். ஆனால் படப்தை எடுக்கும் முன்பு அதன் வரலாற்றின் உண்மையை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எத்தனையோ பேரரசுகள் இருந்த போதிலும் நீண்ட காலமாக ஆட்சி செய்த ஒரே மன்னர்வழிப்பேரரசு சோழப் பேரரசு.
அவர்கள் தங்களுடைய புலிக்கொடியை தான் பயன்படுத்தினார்கள். அப்படிப்பட்ட புலிக்கொடியை உங்கள் படத்தில் ஏன் காட்டவில்லை?. எதற்காக நீங்கள் எல்லாம் படம் எடுக்க வேண்டும். சோழர்கள் கொடி என்றாலும் காலப்போக்கில் அது பிரபாகரனின் சின்னமாக இருந்ததால்தான் அதை காட்ட மறுத்திருக்கிறார் மணிரத்தினம்.
அப்படி என்றால் அந்த பயம் இருந்தால் பொன்னியின் செல்வன் நாவலை ஏன் தொட வேண்டும்? அதை மீறி நிருபர்கள் கேள்வி கேட்டாலும் நான் சோழர்கள் பயன்படுத்திய கொடியைத்தான் பயன்படுத்தினேன் என்று கூறியிருக்கலாமே என அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தார். மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தமிழ் உணர்வோடு இல்லை என்றால் பெரிய விளைவுகளை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.