LATEST NEWS
சுந்தர் சி முதல் தமன்னா வரை….! கலை கட்டிய அரண்மனை 4 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா…. வைரல் புகைப்படங்கள் இதோ…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வளம் வருபவர் நடிகர் சுந்தர் சி. இவர் திரைப்படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். அதிலும் பேய் திரைப்படங்களை இயக்குவதில் பேர் போனவர்.

#image_title
நடிகர் சுந்தர் சி சமீப காலமாக அரண்மனை திரைப்படத்தின் பாகங்களை தொடர்ந்து இயக்கி வருகிறார். அரண்மனை தொடங்கி தற்போது அரண்மனை 4 படம் முடிக்கப்பட்டு ரிலீஸ் க்கு தயாராகி உள்ளது.

#image_title
இந்த படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தை ஒட்டி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

#image_title

#image_title
நேற்று இப்படத்தின் டிரைலர் பட குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள். பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் படக்குழுவினர் பேசினார்கள். படம் குறித்து தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

#image_title
முதலில் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடித்த கமிட்டாகி இருந்தார். சந்தானமும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்து நிலையில் கடைசியில் சுந்தர்சியே இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த முடித்துள்ளார்.

#image_title

#image_title
இப்படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டு முதன் முதலாக அரண்மனை படம் வெளியானது. அதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு அரண்மனை 2, 2021 ஆம் ஆண்டு அரண்மனை 3 என அடுத்தடுத்து மூன்று பாகங்கள் வெளியாகி இருந்தது.

#image_title
இதில் தற்போது அரண்மனை 4 திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கின்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ…

#image_title

#image_title