திமுகவின் 32% மாஸ் வாக்கு வங்கி.. சீனியர்களே தயங்கியபோது துணிச்சலாக ‘ரூட்’ போட்ட உதயநிதி… தவெகவுக்கு ஆரம்பத்திலேயே செக்..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

திமுகவின் 32% மாஸ் வாக்கு வங்கி.. சீனியர்களே தயங்கியபோது துணிச்சலாக ‘ரூட்’ போட்ட உதயநிதி… தவெகவுக்கு ஆரம்பத்திலேயே செக்..?

Published

on

இடைத்தேர்தலில் தனித்துக் களம் கண்ட திமுக 32 சதவீத வாக்குகளைப் பெற்று தங்களது வலுவான வாக்கு வங்கியைத் தக்கவைத்துள்ளது. கூட்டணி இல்லாமல் களம் இறங்கிய போதிலும் இந்த அளவிலான வாக்குகளைப் பெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்தத் துணிச்சலான முடிவின் பின்னணியில் திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இருந்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தலில் கூட்டணி இல்லாமல் போட்டியிடலாமா என்று கட்சியின் மூத்த தலைவர்கள் தயக்கம் காட்டியபோது, தேர்தலை எதிர்கொண்டே தீர வேண்டும் என அவர்தான் மிகவும் உறுதியாக நின்று வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

கூட்டணி பலம் இல்லாமலேயே திமுக தனியாகப் பெற்றுள்ள இந்த 32% வாக்குகள், தமிழக அரசியல் களத்தில் புதிதாக உருவெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும் சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த தேர்தல் முடிவு இனிவரும் தேர்தல்களில் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in