CRIME
மதுபோதையில் மாறிய புத்தி… சொந்த அண்ணனையே கொன்ற தம்பி.. ஒன்றாக சேர்ந்து குடித்துக் கொண்டிருந்தபோதே நடந்த பயங்கரம்..!
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில், குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் தம்பியே தனது சொந்த அண்ணனை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து, தகவல் அறிந்த கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலைக் குற்றவாளியான தம்பி ஷிபு தாக்கூரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், உயிரிழந்த அண்ணன் பைரோ தாக்கூரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே மது அருந்தும்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதே இந்தக் கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. போலீசார் இக்கொலை வழக்கு தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
