CRIME
சிவன் கோவிலுக்குள் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..! மெட்ரோ ஊழியரின் பாலியல் அத்துமீறல் சிசிடிவியில் அம்பலம்.. அதிரவைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதியில் உள்ள நிக்டி நகரில், ஒரு சிவபெருமான் கோவிலுக்குள் வைத்து சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஒரு சிறுமியிடம், அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மெட்ரோ ஊழியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கொடூரச் செயல் அனைத்தும் அந்தச் சிவன் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து, அந்தப் பகுதி உள்ளூர் மக்களிடையே கடுமையான ஆத்திரமும், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அத்துமீறலுக்கு எதிராகத் திரண்டு தங்களது பலத்த கண்டனங்களை பதிவு செய்யத் தொடங்கினர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாகச் செயல்பட்ட நிக்டி பகுதி போலீசார், மெட்ரோ தூண் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த ஊழியரை அதிரடியாகக் கைது செய்து தங்களது காவலில் எடுத்துள்ளனர். மேலும், அந்த நபர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
