ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி-யையும் மீறி தாத்தாவை வரவேற்க ஓடிய பேரன்… நடிகர் பாண்டியராஜன் என்ன செய்தார் தெரியுமா?… - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி-யையும் மீறி தாத்தாவை வரவேற்க ஓடிய பேரன்… நடிகர் பாண்டியராஜன் என்ன செய்தார் தெரியுமா?…

Published

on

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் தான் பாண்டியராஜன். இவரை ‘புதுமை கலை மன்னன்’ என்று தான் பலரும் அழைப்பார்கள். சென்னையைச் சேர்ந்த இவர் தன்னுடைய பள்ளி படிப்பை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். தன்னுடைய இளம் வயதிலேயே கலை துறையின் மேல் ஈடுபாடு அதிகம் இருந்ததால் திரைத்துறையில் சேர்ந்தார்.

அது மட்டுமல்லாமல் சினிமாவில் தோற்றம் மற்றும் உயரம் எதுவும் முக்கியமில்லை என்று நிரூபித்து காட்டிய கலைஞர் இவர்தான். இவருடைய பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக இவரின் பார்வையே பலரையும் வெகுவாக கவரும். பாண்டியராஜன் என்று சொன்னவுடன் அனைவர் நினைவுக்கும் வருவது அவரின் திருட்டு மொழி மற்றும் வெள்ளந்தியான பேச்சு தான்.

Advertisement

 

தன்னுடைய 23 வயதில் சினிமா உலகில் இயக்குனராக பிரபலமானவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தார். கன்னி ராசி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அடுத்தடுத்து ஆண் பாவம், மனைவி ரெடி மற்றும் கபடி கபடி போன்ற 10 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். நடிகர்பாண்டியராஜன் 1986 ஆம் ஆண்டு வாசுகி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் பிரத்திவ் ராஜன் படங்களில் நடித்து வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் நடிகர் பாண்டியராஜன் ஏர்போர்ட்டிலிருந்து வரும்பொழுது அவருடைய பாசமான பேரன் செகியூரிட்டிகளையும் மீறி தாத்தாவை ஓடி சென்று கையை பிடித்து அழைத்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘ தாத்தாவை போல பேரனும் இருக்காரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Prem Rajan (@premrajan_4)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in