என்ன அமலாபால் படவாய்ப்பு இல்லைனு இப்படி இறங்கிடீங்களா?… வைரலாகும் வீடியோ… - Cinefeeds
Connect with us

CINEMA

என்ன அமலாபால் படவாய்ப்பு இல்லைனு இப்படி இறங்கிடீங்களா?… வைரலாகும் வீடியோ…

Published

on

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் 2010 இல் வெளியான ‘மைனா’ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அமலா பாலுக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவர் முன்னணி ஹீரோயினாக நடித்து  கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் கடாவர் (தமிழ்), ஆடு ஜீவிதம் (மலையாளம்), அதோ அந்த பறவை போல (தமிழ்), டீச்சர் (மலையாளம்), கிறிஸ்டோபர் (மலையாளம்) என ஐந்து படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீப நாட்களாக இவர் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அமலா பால். தற்பொழுது இவர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு களிமண் கொண்டு பொருட்கள் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘என்ன அமலாபால் படவாய்ப்பு இல்லைனு இப்படி இறங்கிடீங்களா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)