LATEST NEWS
நடிகர் விஜய்க்கு 103 வயதில் இப்படி ஒரு பாட்டியா?…. அதுவும் எந்த ஊரில் இருக்காங்க தெரியுமா?…. புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில் அண்மையில் படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை விஜய் பாடியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.
இந்நிலையில் விஜயின் அப்பா எஸ் ஏ சி அவர்களின் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 103 வயதாகும் தனது சித்தியை மதுரையில் நேரில் சென்று பார்த்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது தளபதி ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
https://twitter.com/JSKGopi/status/1595271836698578944