காளைகளுக்குப் பதில் மனைவியைக் கட்டி நிலத்தை உழுத கணவன்..! கர்நாடக ஏழை தம்பதியின் நெஞ்சை உருக்கும் அவலம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காளைகளுக்குப் பதில் மனைவியைக் கட்டி நிலத்தை உழுத கணவன்..! கர்நாடக ஏழை தம்பதியின் நெஞ்சை உருக்கும் அவலம்..!!!

Published

on

கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம், உம்னாபாத் தாலுகாவில் உள்ள ஹல்லிகேடா கிராமத்தைச் சேர்ந்த ஏழை தம்பதி திப்பண்ணா மற்றும் கங்கம்மா. இவர்கள் தங்களுக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களிடம் விவசாயம் செய்வதற்குத் தேவையான காளை மாடுகள் இல்லை.

மேலும், டிராக்டர் போன்ற நவீன உழவு இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து நிலத்தை உழுவதற்குக் கூட இவர்களிடம் போதிய பணம் இல்லை. இதன் காரணமாக, வேறு வழியின்றி தம்பதியர் இருவரும் இணைந்து ஏர்க் கலப்பையால் நிலத்தை உழ முடிவு செய்தனர். அதன்படி, மனைவி கங்கம்மாவின் கைகளில் கயிற்றைக் கட்டி, அவர் ஏர்க் கலப்பையை முன்னால் இழுக்க, கணவன் திப்பண்ணா பின்னால் கலப்பையை அழுத்திப் பிடித்து நிலத்தை உழுதுள்ளார்.

Advertisement

இந்த வறுமையின் கொடூரத்தை வெளிப்படுத்தும் சோகமான காட்சி சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து அத்தம்பதியினர் கண்ணீர்மல்கக் கூறுகையில், தங்களுக்கு அரசிடம் இருந்து எந்தவொரு உதவியும் கிடைப்பதில்லை என்றும், வயிற்றுப் பிழைப்புக்காகவே இவ்வாறு விவசாயம் செய்வதாகவும் குறிப்பிட்டு, அரசு தங்களுக்கு நிதியுதவி வழங்கி உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in