LATEST NEWS
விஜய்க்கு கவலை கொடுத்த செய்தி…? உடைந்து போன கால்கள்…?(மாஸ்டர்யின் முக்கிய கதாபாத்திரம்.)

நடிகர் சாந்தனு படத்தில் தனது கதாப்பாத்திரம் அழுத்தமானதாக இருக்கும் எனவும் என்னுடைய கதாப்பாத்திரம் இல்லாவிட்டால் கதையில் சுவராஸ்யம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். படத்தின் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் படம் குறித்த முக்கிய அப்டேட் வெகு விரைவில் வெளிவரும் எனவும் நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.
இளமையான துள்ளல் நிறைந்தவராக நடிகராக சாந்தனு நம் மனங்களை ஈர்த்தவர். நீண்ட நாளாக ஒரு ஹிட் படம் கொடுக்க முயற்சியுடன் போராடி வருகிறார்.
அவர் விஜய்யின் தீவிர ரசிகர். இன்னும் சொல்லப்போனால் நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்தியுடனான இவரின் திருமணத்தை விஜய் தான் தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைத்தார்.
வரும் ஏப்ரல் 9 ல் ரிலீஸாக இருக்கும் மாஸ் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தன் ட்விட்டரில் உதவி கேட்டு டிவிட் போட்டுள்ளார்.
இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தீபக் என்ற இளைஞர் மீது நான்கு சக்கர வாகனம் மோதியதில் கால் சிதைந்து மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சைக்கு உதவி அளிக்கும் படி கேட்டுள்ளார்.