Uncategorized
லோகேஷ் கனகராஜ் செய்த விஷயம் விஜய்க்கு திருப்தி தந்ததா…? படைப்பிடிப்பு முடிந்து செல்லும் பொழுது நடந்தது என்ன…?
இப்படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார்.விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர்.
தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகள் போய் கொண்டு இருக்கிறது என தகவல்கள் வெளியானது. வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இப்படம் வருவது உறுதி என்று இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கூறினார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முறை நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இது மட்டுமின்றி இப்படத்தில் ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், ஸ்ரீமன், சன்ஜீவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்று லோகேஷ் கனகராஜ் தனது துணை இயக்குனர்களுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து செல்லும் பொழுது நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிக சிறப்பான வேலை ஒன்றை செய்துள்ளனர். ஆம் நெய்வேலியில் நடந்த படைப்பிடிப்பு முடிந்து செல்லும் பொழுது அங்கு மரக்கன்றுகள் நட்டுவிட்டு சென்றுள்ளனர்.
தற்போது இந்த விஷயம் புகைப்படத்துடன் சமூக வலைதங்களில் விஜய் ரசிகர்களால் மிக வைரலாக்கப்பட்டு வருகிறது.
