‘தம்பி நாஞ்சிலு… தங்கச்சி தான் உனக்கு ஏத்த ஏஞ்சலு’… நாஞ்சில் மற்றும் அவரது மனைவியை சந்தித்து பரிசு கொடுத்து சர்ப்ரைஸ் செய்த நண்பர்கள்… - Cinefeeds
Connect with us

CINEMA

‘தம்பி நாஞ்சிலு…  தங்கச்சி தான் உனக்கு ஏத்த ஏஞ்சலு’… நாஞ்சில் மற்றும் அவரது மனைவியை சந்தித்து பரிசு கொடுத்து சர்ப்ரைஸ் செய்த நண்பர்கள்…

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் இடையே பெரும் மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி ‘சிரிச்சா போச்சு’. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரும் கஷ்டத்தில் இருப்பவர்களின் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் நாஞ்சில் விஜயன்.

மேலும் இவர் பெருமளவில் பெண் வேடமிட்டு காமெடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று தனது திறமையை நிரூபித்தார். தற்பொழுது இவர் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் தனது விடாமுயற்சியால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைக்க சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதேசமயம் பல விமர்சனங்களை முன்வைத்து அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கி மாட்டிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நாஞ்சில் விஜயனுக்கு  திருமணம் நடந்து முடிந்தது.  இத்திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். தற்பொழுது இத்திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத அவரது நண்பர்கள் அவரது வீட்டிற்கு கிப்ட் வாங்கி சென்று சர்ப்ரைஸ் செய்துள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)