மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஜி.பி முத்து…. இனி வெளிய போக முடியாது…. செம குஷியில் ரசிகர்கள்….!!!! - cinefeeds
Connect with us

TRENDING

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஜி.பி முத்து…. இனி வெளிய போக முடியாது…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 90 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது ஏழு போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். அப்படி பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் youtube பிரபலம் ஜிபி முத்து.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது காமெடிக்கு பஞ்சமில்லை. அந்த அளவு மகிழ்ச்சியாக சக போட்டியாளர்களை வைத்துக் கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்களை வரவழைத்து உற்சாகப்படுத்தி வருகிறார் பிக் பாஸ்.

Advertisement

அவ்வகையில் ராபர்ட் மாஸ்டர், ஜி பி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் ஜிபி முத்துவை இனி வெளியில் அனுப்பப் போவதில்லை என்று கூறி கலாய்த்துள்ளார். இதற்கு நான் எங்கே இருக்கேன் என சந்தோசமாக ஜிபி முத்து கூறிய நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in