LATEST NEWS
சிம்புவுக்கு வில்லன் இவரா? வெளியான புகைப்படங்கள் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் மிகப்பெரும் ரசிகர் கூட்டம் கொண்டவர் தான். சிம்பு எனும் சிலம்பரசன் ஆவர். இவர் பிரபல டைரக்டர் டி.ராஜேந்திரனின் முத்த மகன் ஆவர். இவர் சிறுவயது முதல் சினிமாவில் உள்ளார்.இவருடைய நடனம் மற்றும் பாடலுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.
இந்நிலையில் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன, இதில் எஸ்.ஜே சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதி ராஜா, எஸ்.ஏ சந்திரசேகர் என பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாநாடு பட வில்லன் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.அதற்கு விடை தற்போது கிடைத்து உள்ளது.தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களை பார்க்கும் போது எஸ். ஜே சூர்யா தான் வில்லனாக நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
மனோஜ் போலீஸ் வேடத்தில் நடிப்பது போல் தெரிகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.இந்த படங்கள் ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.