உங்களுக்கு நீரிழிவு பிரச்சனையா..? இதன் சரிசெய்ய நாம் செய்ய வேண்டியவை என்ன….? உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் இந்த மருந்து… - cinefeeds
Connect with us

Uncategorized

உங்களுக்கு நீரிழிவு பிரச்சனையா..? இதன் சரிசெய்ய நாம் செய்ய வேண்டியவை என்ன….? உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் இந்த மருந்து…

Published

on

நாவல்பழம் நீரிழிவை நீக்கும்… புண்களை விரைவில் ஆற்றும்….

நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.
நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இதனை இரண்டு வேளைகள் என்று 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.

Advertisement

பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக்குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது.

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

Advertisement

நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு சிறுநீர்ப்போக்குக் குறையும்.

Advertisement

நாவல்பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in