Uncategorized
காதல் கொலையாக மாறியது எப்படி? தேனீ அருகே பரபரப்பு

தேனி மாவட்டம் போடி, நந்தவன தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி வளர்மதி.3 வருடங்களாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் வளர்மதிக்கு கேரளாவில் 15 ஏக்கர் ஏலத்தோட்டம் உள்ள நிலையில் இவரிடம் கேரளாவைச் சேர்ந்த பியல்ராஜா (31) என்பவர் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் இவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் உல்லாசமாக இருந்தனர்.
பின்னர் வளர்மதியிடம் கருத்து வேறுபாடு காரணமாக ராஜா கத்தியை காட்டி மிரட்டி கொல்ல முயன்றதாக தெரிகிறது.
இந்நிலையில் சாமாதானமாகிவிடலாம் என்று கூறி ராஜாவை வளர்மதி போடிக்கு வரச் சொல்லி அழைத்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த ராஜாவின் முகத்தில் மிளகாய்ப்பொடி வளர்மதி தூவியதோடு, தான் ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி ராஜாவை கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வளர்மதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொலைச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது.