“குடும்பத்தில் வெடித்த சண்டை..” 3 பிள்ளைகள் கதறக் கதற… கணவன் செய்த கொடூர காரியம்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“குடும்பத்தில் வெடித்த சண்டை..” 3 பிள்ளைகள் கதறக் கதற… கணவன் செய்த கொடூர காரியம்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், மூன்று குழந்தகளின் கண் எதிரே கணவனே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. முகமது முஸ்தபா என்பவருக்கும் அஜ்மேரா பேகம் என்பவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன; இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். திங்கட்கிழமை மதிய வேளையில் தம்பதியினருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முஸ்தபா, தனது மூன்று பிள்ளைகளும் அங்கேயே இருந்ததைக்கூடப் பொருட்படுத்தாமல், கத்தியை எடுத்து அஜ்மேரா பேகத்தின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

அஜ்மேரா பேகம் வேறொரு நபருடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்ததாக முஸ்தபா சந்தேகித்ததே இக்கொலைக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோரச் சம்பவத்தை நிகழ்த்திய பிறகு முஸ்தபா அவ்விடத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். தப்பியோடிய குற்றவாளியைத் தனிப்படைகள் அமைத்து ஹைதராபாத் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சட்டத்தின் மீதான பயமின்மை மற்றும் சமூகத்தில் அதிகரித்து வரும் இதுபோன்ற குடும்ப வன்முறைக் குற்றங்கள் பொதுமக்களிடையே பெரும் கவலையையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in