Uncategorized
வெளிநாட்டில் இருந்து வந்து’.. “அண்ணியுடன் படுக்கையை பகிர்ந்த கணவர்”… ‘தடையாக இருந்த மனைவிக்கு’… நேர்ந்த பரிதாபம்….?

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பனைகுளம் அருகே உள்ள கிராமம் கிருஷ்ணாபுரம் இந்த ஊரை சேர்ந்த தம்பதிகளான முனீஸ்வரன், தனலெட்சுமி இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது தற்போது இந்த தம்பதியினருக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. சொந்த ஊரில் போதிய வருமானம் இல்லாததால் வெளிநாட்டில் வேலைப் பார்த்து வந்தார் முனீஸ்வரன், தற்போது சில மாதங்களுக்கு முன்னர் சொந்த ஊர் வந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 18-ம் தேதி மனைவிடம் நகைகளை கேட்டுள்ளார் முனீஸ்வரன் ஆனால் அவர் தர மறுக்கவே, ஆத்திரமடைந்து மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் முனீஸ்வரன் தாமாகவே முன்வந்து காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
இந்த வழக்கில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை எல்லாம் முனீஸ்வரன், தனது அண்ணியிடம் கொடுத்து வந்துள்ளார், நீண்ட நாட்களாகவே அண்ணியுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் மனைவி தனலட்சுமி சாப்பற்றிக்கே கஷ்டப்பட்டதாகக் கூறப்டுகிறது.
பின்னர் அந்த கிராமத்தில் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுவின் உதவியுடன் வீட்டில் தென்னங்கீற்று பின்னி விற்பனை செய்து அதில் குடும்பம் நடத்தி வந்தார் தனலட்சுமி. இந்தநிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த முனீஸ்வரன் அண்ணியிடம் நெருக்கம் காட்டி வந்ததாகவும், இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்ய, நகை என்று நாடகமாடி பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்து, தாமாக முன்வந்து சரணடைந்தது போலீசாரின் விசாணையில் தெரியவந்துள்ளது.