CINEMA
“லப்பர் பந்து” நடிகை சுவாசிகாவின் கணவர் விஜய் டிவி பிரபலமா…? இது தெரியாம போச்சே…!!

லப்பர் பந்து படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாக நடிகை சுவாசிகா நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் பல வருடங்களுக்கு முன்பே வைகை, கோரிப்பாளையம், சாட்டை ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த அளவிற்கு இவர் பெயர்வெளி வரவில்லை. இதனால் மலையாள படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் லப்பர் பந்து படத்தின் மூலமாக திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை சுவாசிகா விஜய் டிவி சீரியல் நடிகர் பிரேம் ஜேக்கப் என்பவருடைய மனைவி என்பது பலரும் தெரிந்திருக்காத ஒரு விஷயம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான நீ நான் காதல் என்ற தொடரில் நடித்து வருகிறார்.